Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயர்வு: இந்திய மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்!

ஆகஸ்ட் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்திய மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் பணியாளர்களுக்குக் பிடிக்கப்படும் EPF கட்டாய ஊதிய உச்சவரம்பை ரூ.15,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவையின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு இது அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வரவுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 1, 2027 முதல் நடைமுறைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்த EPF ஊதிய வரம்பு ரூ.6,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வரம்பை ரூ.30,000 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்ட நிலையில், இறுதியாக ரூ.25,000 ஆக நிர்ணயித்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போதைய நடைமுறைப்படி, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.15,000 வரை இருந்தால் மட்டுமே EPF பிடித்தல் செய்வது கட்டாயமாக இருந்தது.

இனி புதிய வரம்பின் மூலம், மாத அடிப்படைச் சம்பளம் ரூ.25,000 வரை பெறும் தனியார் துறை ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக EPF மற்றும் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) இணைக்கப்படுவர். இதன் மூலம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் பெறும் லட்சக்கணக்கான தனியார் துறை ஊழியர்கள் புதிதாகச் சமூக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள்.

ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கிற்கு (EPS) நிறுவனங்கள் அளிக்கும் 8.33% பங்களிப்புடன், மத்திய அரசும் 1.16% நிதியை வழங்கி வருகிறது. இந்த ஊதிய வரம்பு உயர்த்தப்படுவதால் மத்திய அரசுக்கான நிதிச்சுமையும் அதிகரிக்கும். 2026-27 நிதியாண்டில் ஓய்வூதியத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.11,144 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் கட்டாயமாக EPF திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். 20-க்கும் குறைவான பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் EPFO தளத்தில் பதிவு செய்து ஊழியர்களை இணைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கிளாஸ்கோ காமன்வெல்த் 2026இல் வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா!
அடுத்த செய்தி மேகதாதுவில் அணை கட்ட முற்றிலும் தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

இந்தியாவில் பாரிய விபத்து – 13 பேர் பலி

மார்ச் 26, 2026
இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டம் – நால்வரிடம் தீவிர விசாரணை!

ஜூலை 14, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தீக்குளிப்பு போராட்டம் – தமிழக மீனவர்கள் எச்சரிக்கை!

மார்ச் 3, 2025
இந்தியா

தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்

மே 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?