உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தம்மைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த எழுத்தாணை மனு மீதான உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
குறித்த மனுவை மேலதிக விசாரணைக்காக ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பான உத்தரவே எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.


