Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் “மகாவித்தியன்ஸ் நாள் – 2026”

ஆகஸ்ட் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட “மகாவித்தியன்ஸ் நாள் – 2026” நிகழ்வானது இன்று (01) சனிக்கிழமை பாடசாலை வளாகத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்தது.

பழைய மாணவர்கள் தங்களது பாடசாலைக் கால நினைவுகளை மீட்டுவதுடன், பாடசாலையின் அபிவிருத்திக்குத் தம்மாலான பங்களிப்பை வழங்கும் நோக்கிலும், “நூற்றாண்டில் கேட்போர் கூடம்” எனும் திட்டத்திற்கு ஆதரவு நல்கும் வகையிலும் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

ஆலய வழிபாட்டுடன் ஆரம்பமான நிகழ்வில், மரநடுகை, மங்கல விளக்கேற்றல், கொடியேற்றம் மற்றும் பாடசாலைக் கீதம் என்பன இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து பழைய மாணவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும், க. ஹரிப்பிரசாத் அவர்களின் தலைமையுரையும் வரவேற்புரையும் இடம்பெற்றன.

தொடர்ந்து, பாடசாலை அதிபரின் சிறப்புரை இடம்பெற்றதுடன், பாடசாலைக்கு அளப்பரிய சேவையாற்றிய முன்னாள் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, பெருந்திரளான பழைய மாணவர்கள் பங்கேற்ற விசேட நடைபயணம் இடம்பெற்றது.

இந்நடைபயணம் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகி, வவுனியா மணிக்கூட்டு கோபுரம், குருமன்காடு மற்றும் வவுனியா பஜார் வீதி ஊடாகச் சென்று மீண்டும் பாடசாலை வளாகத்தை வந்தடைந்தது.

நடைபயணத்தின் நிறைவில் பழைய மாணவர்களுக்கிடையிலான விறுவிறுப்பான மென்பந்துச் சுற்றுப் போட்டியும், வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பெருந்திரளான பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன்பிரும்பிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

முந்தைய செய்தி மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயதுடைய மீனவர்
அடுத்த செய்தி மஹர சிறைச்சாலையில் நிலவும் பதற்றநிலை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இடம்பெற்ற கடற்றொழில் சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

ஆகஸ்ட் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் போதைப் பொருளுடன் 29 வயதுடைய பெண் வியாபாரி கைது

ஜூன் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஹட்டனில் நகைக் கடையில் பெறுமதியான நகைகளை திருடிய பெண் கைது!

ஆகஸ்ட் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

ஆகஸ்ட் 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?