Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

ஜூலை 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டொராண்டோ நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் (U.S. Consulate) வெளிப்புறப் பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, டொராண்டோ பொலிஸ்துறையினர் அப்பகுதியை முழுமையாக முடக்கி தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று அதிகாலை 4:45 அளவில் யுனிவர்சிட்டி அவென்யூ மற்றும் ஆர்முரி வீதிக்கு இடைப்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் சத்தம் கேட்டதாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட சோதனையின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்து வெள்ளை நிற ‘செடான்’ (Sedan) ரகக் கார் ஒன்று அதிவேகமாகத் தப்பிச் சென்றதை சாட்சிகள் பார்த்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சந்தேகநபர்கள் குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. சம்பவ இடத்தைச் சுற்றிப் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தடயவியல் நிபுணர்களின் வாகனங்கள் உட்பட 12க்கும் மேற்பட்ட பொலிஸ் ரோந்து வாகனங்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, யுனிவர்சிட்டி அவென்யூவின் தெற்கு நோக்கிய பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுப் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.

கனடாவுக்கான அமெரிக்கத் தூதரகக் கட்டடத்தை இலக்கு வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்பதைப் பொலிஸார் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாத போதிலும், கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதியும் இதே தூதரகக் கட்டடம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

தற்போது நான்கு மாதங்களின் பின்னர் மீண்டும் அதே பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஜெர்மனி தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியலின் ‘பிரைட்’ பேரணிக்கான பாதுகாப்பு அதிகரிப்பு.
அடுத்த செய்தி சிறுமி மெலினா ஃபிராட்டோலினின் பெயரில் நிறுவப்பட்டுள்ள புதிய வீதிப் பெயர்ப்பலகைகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

Trump இன் வரிகள் குறித்து Joly,Carney க்கு மட்டும் விளக்கமளித்தது ஏன்?

மார்ச் 7, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேலிய பணயக்கைதிகள் 4 பேரின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்..!!

பிப்ரவரி 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் – நா.உ.க.இளங்குமரன்

ஜூன் 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு அரசடி உணவகம் ஒன்றில் கொத்து தயாரிப்பாளர் மீது ஒரு குழுவினர் தாக்குதலில் படுகாயம்

ஏப்ரல் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?