Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

ஜெர்மனி தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியலின் ‘பிரைட்’ பேரணிக்கான பாதுகாப்பு அதிகரிப்பு.

ஜூலை 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில் நடைபெறவுள்ள ‘ஃபியெர்டே மொன்றியல்’ (Fierté Montréal) பிரைட் திருவிழாவின் பாதுகாப்பை மேலும் தீவிரப்படுத்துவதற்கு, ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற ‘பிரைட்’ (Pride) விழாவில் வாகனத்தை மோதி நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் 29 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்தே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் இடம்பெற்ற இச்சம்பவம் உலகெங்கிலும் உள்ள 2SLGBTQ+ சமூகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் ‘கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே’ (Christopher Street Day) பிரைட் கொண்டாட்டங்களின் போது, கூட்டத்திற்குள் வேன் ஒன்றை அதிவேகமாகச் செலுத்தியே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 65 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 29 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல் தீவிரவாத பின்னணியைக் கொண்டது என ஜெர்மன் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி, நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள மொன்றியல் பிரைட் பேரணிக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெர்லின் தாக்குதலுக்கு ஆழ்ந்த இரங்கலையும் 2SLGBTQ+ சமூகத்தினருக்கான தங்களின் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியுள்ள ‘ஃபியெர்டே மொன்றியல்’ அமைப்பின் இடைக்கால நிர்வாக இயக்குநர் ஹிஜினோ மொன்டேரோ (Higino Monteiro), மொன்றியல் பொலிஸ்
திணைக்களத்துடன் (SPVM) இணைந்து பாதுகாப்பை பலப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மொன்றியலில் பிரைவேட் பார்ட்டி மற்றும் பேரணிகளை ஒருங்கிணைக்கும் ‘வைல்ட் பிரைட்’ (Wild Pride) அமைப்பின் நிர்வாகி ரோமேன் மேத்யூ (Romain Matthieu) இது குறித்துக் கூறுகையில், விழா நடைபெறும் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்துள்ளார்.

கனடாவில் 2SLGBTQ+ சமூகத்திற்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், பெர்லின் தாக்குதலானது விழா ஏற்பாட்டாளர்களுக்கு கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அமைப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முந்தைய செய்தி கனடாவில் அணுவாயுத எதிர்ப்பு கொள்கை நிலவினாலும், உள்நாட்டில் அணுவாயுதம் தயாரிக்கும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக கணிப்பு!
அடுத்த செய்தி டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார் அதானி

ஏப்ரல் 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!

ஜூலை 18, 2026
அண்மைய செய்திகள்விளையாட்டு

கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளை நிறைவு செய்த விராட்.

ஆகஸ்ட் 20, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

புது வாழ்வின் விழாவாக இந்த உயிர்ப்பு விழா அமைய வேண்டும் – மன்னார் மறைமாவட்ட ஆயர்

ஏப்ரல் 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?