மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில் பகுதியில் தனியார் பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்தொன்று சம்பவித்துள்ளது.
குறித்த தனியார் பேருந்து திஸ்ஸமஹாராமாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த வேளையில் வீரவில பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதாக தேர்தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதுடன், இதில் 11 பேர் ஆண்கள் என்றும் 07 பேர் பெண்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்விபத்தில் காயமடைந்தோர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், நால்வர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




