Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

மனித கடத்தல் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஸ்டாபனி ஸ்கொயர்

ஜூலை 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென் லோரன்ஸ் நதி வழியே மனிதர்களைச் சட்டவிரோதமாகக் கடத்தியதில், ருமேனியக் குடும்பமும் படகோட்டியும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண் ஒருவர் அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அக்வேசாஸ்னே (Akwesasne) மோஹாக் பிராந்தியத்தைச் சேர்ந்த கனடா – அமெரிக்க இரட்டைக் குடியுரிமை கொண்ட ஸ்டாபனி ஸ்கொயர் (Stephanie Square – 53) என்ற பெண்ணே, கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் அமெரிக்க நீதிமன்றத்தில் தன் குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.

சட்டவிரோத ஊடுருவலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை, நிதி ஆதாயத்திற்காக மனிதர்களைக் கடத்தியமை மற்றும்  உயிரிழப்புகளுக்குக் காரணமான கடத்தல் நடவடிக்கை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஸ்கொயர் ஒப்புக்கொண்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி அன்று இரவு கனடாவின் கார்ன்வால் தீவிலிருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்ட படகு, கடுமையான வானிலையால் சென் லோரன்ஸ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ருமேனியக் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும், படகைச் செலுத்திய கேசி ஓக்ஸ் (Casey Oakes) என்பவரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அமெரிக்க நீதித் துறையின் கூற்றுப்படி, கனடாவின் ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் அமெரிக்காவின் நியூயோர்க் மாநில எல்லைகள் சந்திக்கும் அக்வேசாஸ்னே பிராந்தியத்தில் இயங்கிவந்த மனிதக் கடத்தல் வலையமைப்பின் அமெரிக்கத் தலைவராகச் செயற்பட்டவராக ஸ்டாபனி ஸ்கொயர் அடையாளம் காணப்பட்டுள்ளார் இவருக்கான தண்டனை விபரம் எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

முந்தைய செய்தி சென் லோரன்ஸ் நதியில் தவறி விழுந்த பெபிட்டோ ஜூனியரை தேடும் பணிகள் நிறுத்தம்
அடுத்த செய்தி மயிலிட்டியில் 14ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கில் இடம்பெற்ற விபத்துகள் தொடர்பான விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

கோல்டன் டோம் பாதுகாப்பு திட்டத்தில் இணைய கனடா முடிவு

ஜூன் 18, 2025
கனடா

கனடிய மருத்துவத் துறையில் பணியாற்றும் மருத்துவர்களால் இழைக்கப்படும் பாலியல் அத்துமீறல்கள்

ஏப்ரல் 21, 2026
கனடா

கார்டி ஹோவ் சர்வதேசப் பாலம் தொடர்பில் மத்திய அரசு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஜூலை 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?