கனடாவின் கியூபெக் மாகாணத்தில், மொன்றியல் அருகே இடம்பெற்ற சரக்கு ரயில் தடம்புரள்வு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Repentigny பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில், Canadian National Railway நிறுவனத்தின் சரக்கு ரயிலில் இருந்த 49 பெட்டிகள் தடம்புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், ஆபத்தான இரசாயனப் பொருட்கள் எதுவும் கசிவடையவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கனடா போக்குவரத்து பாதுகாப்பு சபை, அதாவது Transportation Safety Board of Canada, சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், ரயில் பாதையின் சில பகுதிகளில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான குறைபாடுகள் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் பாதை நிலை, தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விபத்துக்கான முழுமையான காரணம், விசாரணை நிறைவடைந்த பின்னரே வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

