மெக்ஸிகோவில் இன்று 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் உட்பட பல பகுதிகளில் கட்டிடங்கள் கடுமையாகக் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீதிகளுக்கு வெளியேறினர். பல இடங்களில் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மெக்ஸிகோவுக்கு அருகிலுள்ள சில மத்திய அமெரிக்க நாடுகளிலும் இந்த நிலநடுக்க அதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, உயிரிழப்புகள் மற்றும் சேத விபரங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அதிகாரிகள் மீட்பு மற்றும் சேத மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

