வேலணை பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபையின் செயலாளர் தி.தியாகச்சந்திரன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வேலணை மத்திய கல்லூரியின் துரைச்சாமி மண்டபத்தில் உள்ளூராட்சி விழா நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு, வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் இ.குருபரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், கரவெட்டி பிரதேசசபையின் செயலாளர் க.கம்சநாதன் கௌரவ விருந்தினராகவும் கலந்துக்கொண்டிருந்தார்கள்.
விருந்தினர்கள் அனைவரும் அணிவகுப்பு மரியாதையுடன் மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
பின்னர் நிகழ்வில் நடனப் போட்டிகள் நடைபெற்றதுடன், பிரதேச சபை பணியாளர்களுக்கான மெச்சுரை சான்றிதழ்களையும் ஆளுநர் வழங்கி வைத்தார்.
அத்துடன் பிரதேச சபையின் செயலாளர் தி.தியாகச்சந்திரன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் (30 )அரச சேவையிலிருந்து ஓய்வுபெறும் நிலையில் அவருக்கான கௌரவிப்பையும் ஆளுநர் வழங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
