Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

14 வயது மகளை பாலியல் வன்புணர்வு புரிந்த தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை!-வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஜூலை 16, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE
கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல் வன்புணர்வு புரிந்த தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டு காலப் பகுதிகளில் தனது சொந்த மகளை தொடர்ச்சியாக பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டணை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு மற்றும் ஒரூ இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராத தொகையும் வழங்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்களினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
14 வயது நிரம்பிய சிறுமிக்கு எதிராக குறித்த செயலானது வவுனியா, கனகராயன் குளம் பகுதியில் 2013, 2014 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் குறித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையினை பொலிசார் கைது செய்து பி அறிக்கையின் மூலம் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
அதனை தொடர்ந்து குறித்த எதிரிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகர்வு பத்திரம் தாக்கம் செய்யப்பட்ட நிலையில், வழக்கு தொடர்ச்சியாக விளக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு, குறித்த வழக்கானது வவுனியா மேல் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக இன்றைய தினம் (16.07) திகதியிடப்பட்டு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்போது, குறித்த 47 வயது நிரம்பிய எதிரிக்கு எதிராக 4 பாலியல் வன்புணர்வு குற்றச் சாட்டுக்கள் அரச சட்டவாதியால் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மன்று, இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 4 குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்ட நிலையில் 45 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன், நிரூபிக்கப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ரூபாய் 3 இலட்சம் வீதம் 12 இலட்சம் ரூபாய் சிறுமிக்கு நஸ்ட ஈட்டுத் தொகையாக செலுத்த வேண்டும் எனவும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு இலட்சம் ரூபாய் நீதிமன்றத்திற்கு அபாரம் செலுத்த வேண்டும் எனவும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்தார். குறித்த வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக அரச சட்டலாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிரந்தார்.
குறித்த பாதிக்கப்பட்ட சிறுமியை பாதுகாக்க வேண்டிய அவரின் இயற்கை பாதுகாவலராகிய தந்தையே குறித்த குற்றச்சாட்டினை புரிந்துள்ளமை காரணமாக குறித்த எதிரிக்கு எதிராக எவ்வித கருனையும் காட்டாது அதிகபட்ச தண்டனை விதித்துள்ளதாக நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பின் போது சுட்டிக்காட்டி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முந்தைய செய்தி இலங்கை மக்கள் எதிர்பாராத முக்கிய குற்றவாளிகள் விரைவில் நாடு திருப்பப்படுவார்கள் – அமைச்சர் தகவல்
அடுத்த செய்தி மொன்றியல் மெட்ரோபொலிட்டன் விமான நிலையத்தில் விமான விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்கள் வீடு வீடாகச் சென்று அவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்!

ஏப்ரல் 17, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் தேர்தல்: PQக்கு நெருக்கடி நிலை!

ஏப்ரல் 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையும், அதன் சேவைகளும் முற்றாக முடங்கும் அபாயம் !

ஜூன் 8, 2025
1
இலங்கை

நாட்டில் நாளை மழை பெய்யும் சாத்தியம்.

பிப்ரவரி 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?