Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

எல்நினோவினால் யாழ்ப்பாணத்திற்கு பாதிப்பு – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

ஜூலை 12, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ, இம்மாதம் யூலை தொடக்கம் அக்டோபர் மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியரும் கலை பீடாதிபதியுமான நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்தார்.

யாழ் கலட்டி வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஏற்பாடு செய்த எல்நினோ தொடர்பான விவசாய போதன ஆசிரியர்கள் மற்றும் கடத்தொழில் சார்ந்தவர்களுக்கான செயல்மர்வில் பங்கு பற்றிக் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்த சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கடல் வெப்பம் இலங்கை மற்றும் மாலைதீவில் அதிக தாக்கத்தை செலுத்த வாய்ப்புகள் உள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத் தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாரிய நீருக்கான தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும்.

நிலத்தின் ஊடாக வெப்பத்தை கடத்துவதிலும் பார்க்க 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகின்ற நிலையில் இந்த சமுத்திரக் கடற்பரப்பில் ஏற்படுகின்ற கடல் வெப்ப ஏற்றம் வேகமாக ஏனைய பகுதிகளுக்கும் பரவும்.

ஜூலை தொடக்கம் செப்டம்பர் மாதம் வரையில் அதிகமான வறட்சியை ஏற்படுத்துகின்ற எல்நினோ அக்டோபர் நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்சியையும் ஏற்படுத்தும்.

இருந்தாலும் இந்த தாழமுக்கங்கள் அக்டோபர் மாதத்திற்கு பின்னரான காலப் பகுதியிலே ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கும் நிலையில் அதுவரையான காலப் பகுதியில் அதிக வறட்சியே நிலவும்.

ஆகவே எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில் பொதுமக்கள் நீர் முகாமைத்துவத்தை சரியாகப் பின்பற்றி அதிக வெப்பத்தினால் ஏற்படுகின்ற நீர்த்தட்டுப்பாட்டினை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன் வர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் திருமதி அஞ்சனாதேவி சிறிரங்கன், யாழ் மாவட்ட கடத்தொழில் நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ் அகிலன் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஜான்சன் பிரிடாரோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி யாழ் பல்கலையில் வெளியிடப்பட்ட 10 ஆவது “நீதம்” இதழ்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுங்கள் – விஜய் அறிவிப்பு

மே 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சாவகச்சேரியில் மனைவி மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட குடும்பஸ்தர்

ஏப்ரல் 28, 2026
இலங்கை

காற்றாலை திட்டம் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தம்!

ஆகஸ்ட் 13, 2025
இலங்கை

மன்னாரில் தொடரும் நகை அபகரிப்பு – குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம்

பிப்ரவரி 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?