Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் 21 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

ஜூன் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா, லக்ஷபான வீதிக்கு அருகில் நேற்று இடம்பெற்ற சுற்றிவளைப்பில், 21 கிலோ 600 கிராம் கேரளக் கஞ்சாவைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் வவுனியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த சிற்றூந்து ஒன்றில் இருந்த கஞ்சா பொதிகளை முச்சக்கரவண்டிக்கு மாற்றும் போது, காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவருடன் இருந்த மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து பொதி செய்யப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ 600 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

அத்துடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சிற்றூர்ந்து மற்றும் முச்சக்கரவண்டி ஆகியனவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதோடு, தப்பிச் சென்றவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி தொல். திருமாவளவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கிடையில் இன்று கலந்துரையாடல்
அடுத்த செய்தி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் வெறும் நாடகமல்ல என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான பரிந்துரை வாத நிகழ்ச்சித் திட்டம்!

ஜூன் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மினாநகர் மக்கள் தமது வீதியை புனரமைத்து தருமாறு ஆர்ப்பாட்டம்!

ஜூலை 7, 2025
இலங்கை

நெடுந்தீவு மக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

நவம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு…

மே 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?