தங்காலை பகுதியில் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சொகுசு பேருந்து சாரதியாக பணியாற்றி வந்ததுடன், மாகும்புரவிலிருந்து தங்காலை நோக்கி பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.
இதன்போது சாரதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதித்த வேளை உயிரிழந்துள்ளார்.
இந்த சாரதியின் வயிற்றில் போதைப்பொருள் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அப்பொதியில் ஒன்று வெடித்ததனால் உடலுக்குள் விஷம் பரவி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


