Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்திற்கு பெருமை – நா.வேதநாயகன்

பிப்ரவரி 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வள்ளுவர் பிறந்தமையால் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு பெருமையோ அதேபோல திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் அமைந்ததால் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

மாவிட்டபுரத்தில் நேற்றைய தினமும் ஞாயிற்றுக்கிழமை திருக்குறள் வளாகம் திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற மாலை நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் ம.பிரதீபன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், தமிழ்த்துறை பீடாதிபதி விசாகரூபன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் ஆளுநர் உரையாற்றும் போது,

ஏனையோரால் நினைத்துப்பார்க்க முடியாத விடயங்களை ஆறு.திருமுருகன் சாதித்து வருகிறார். தமிழுக்கும், சைவத்துக்கும் தனது வாழ்வையே அர்ப்பணித்து அரும்பணியாற்றி வருகின்றார்.

ஏனைய ஆலயங்களுக்கு முன்மாதிரியாக சமூகப்பணிகளை அவர் முன்னெடுத்து வருகின்றார். அதை ஏனைய ஆலயங்களும் பின்பற்றவேண்டும்.

இன்று பலர் கொடையளிக்க தயாராக இருந்தாலும் நிதி மீதான வெளிப்படைத்தன்மை இன்மையால் தயங்குகின்றனர். ஆறு.திருமுருகன் மீது கொண்ட நம்பிக்கையால்தான் பலர் நிதி கொடுக்கின்றனர். ஏமாற்றுபவர்கள் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்க முடியாது அவர்கள் விரைவில் அழிவது இயற்கை.

திருக்குறள் தமிழர்களுக்கு பெருமை, எந்தக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய நூலாக திருக்குறள் அமைந்துள்ளது. எந்தமொழி பேசுவோரும், எந்த மதத்தைப் பின்பற்றுவோரும் திருக்குறளை படிக்க முடியும், திருவள்ளுவர் தமிழராகப் பிறந்தமை எங்களுக்கும் பெருமை என மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி யாழில். அதீத போதை காரணமாக இளைஞன் உயிரிழப்பு.
அடுத்த செய்தி யாழில் தனியார் காணியில் இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகள்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு நவம்பர் 12 திகதிவரை ஒத்திவைப்பு!

செப்டம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பெண்களை வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு என பிரதமர் தெரிவிப்பு!

ஜூலை 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவாஜிலிங்கம்

டிசம்பர் 13, 2025
இலங்கை

நல்லூரான் வளைவுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு தடை!

டிசம்பர் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?