Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் டெங்கு நோயாளர்கள் 35,228 ஆக உயர்வு!

ஜூன் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,228 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30% முதல் 40% வரை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் கூறினார். அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதிலும் குறிப்பாக கொழும்பு மாவட்டமே அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மேலும், மாத்தறை, காலி, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் கணிசமான அளவில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவான மொத்த நோயாளர்களில் சுமார் 80% பேர் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் கண்டி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இன்று (05) மேலும் ஒரு டெங்கு மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டின் மொத்த டெங்கு மரண எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 5 ஆண்களும், 15 பெண்களும் அடங்குகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2025 ஆம் ஆண்டில் டெங்கு காரணமாக 29 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு
அடுத்த செய்தி தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்

மார்ச் 18, 2026
இலங்கை

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளியுங்கள் – ஆளுநர் நா.வேதநாயகன்

பிப்ரவரி 10, 2026
இலங்கை

வவுனியாவில் கத்தி குத்து

பிப்ரவரி 23, 2026
இலங்கை

காட்டு யானைத் தாக்குதலால் இருவர் உயிரிழப்பு.

பிப்ரவரி 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?