Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு

ஜூன் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உணர்வெழுச்சி நிகழ்வாக உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலையில் நடைபெற்றது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை 8 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றன.

இந் நிகழ்வில் பொது ஈகைச் சுடரினை பொன் சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் சுடர் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.

தியாகி பொன் சிவகுமாரன் உள்ளிட்ட இன விடுதலைக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்த போராளிகள் பொதுமக்களை நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அக வணக்கத்தினைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம், சட்டத்தரணி காண்டிபன், சட்டத்தரணி மணிவண்ணன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், பிரதேச சபைத்தவிசாளர்கள் சார்பில் தி.பிரகாஸ், முன்னாள் போராளிகள் சார்பாக ஈஸ்வரன் உள்ளிட்டவர்கள் சிவகுமாரனின், திருவுருவச்சிலைக்கு மாலர்மாலை அணிவித்து கௌரவமளித்தனர்.

அதனைத் தொடர்ந்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மலர் வணக்கத்தினைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உரை ஆற்றினார்.

உரையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளுராட்சி மன்றம் ஒன்று வழங்கக்கூடிய உயரிய கௌரவமாக தியாகி பொன் சிவகுமாரின் நினைவேந்தலை தமது சபை மேற்கொள்வதாகத் தெரிவித்தார். சிவகுமாரனின் தியாகம் மற்றும் போராட்ட வடிடிவங்கள், தமிழ் மாணவர்களின் எழுச்சி உள்ளிட்ட வடிவங்கள் நினைவுகூறப்பட்டதுடன், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து தியாகி சிவகுமாரன் விடுதலை வேட்கை பற்றியும், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் சிவகுமாரனின் காத்திரம் பற்றியும் விபரிக்கப்பட்டது.

அஞ்சலி நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், பிரதேச அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், உள்ளராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு அஞ்சலித்தனர்.

அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுதிரண்டு சிவகுமாரனின் நினைவேந்தலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இலங்கையில் டெங்கு நோயாளர்கள் 35,228 ஆக உயர்வு!
அடுத்த செய்தி மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நாரஹேன்பிட்டி புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் திட்டம் முன்னெடுப்பு!

செப்டம்பர் 27, 2025
இலங்கை

நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட 5வயது சிறுவன் உயிரிழப்பு!

அக்டோபர் 9, 2025
இலங்கை

எதிர்ப்பு பேரணி வெற்றியை தொடர்ந்து மூன்று பேரணிகளை நடத்த பொதுஜன பெரமுன திட்டம்!

நவம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி மன்றங்கள் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

அக்டோபர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?