பனைவள மேம்பாட்டு பத்திரிகையான ஒளிரும் சூரியன் மாதப் பத்திரிகையின் ஓராண்டு விழா யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டார்.
சிறப்பு விருந்தினராக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் ஆர் ரவீந்திரன் இயக்குனர் சபை உறுப்பினர் ந. கமலாகரன் பொதுசன நூலக உதவி நூலகர் அனிதா தயாளன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
பத்திரிகையின் ஓராண்டிதழின் முதல் பிரதியை பிரதம ஆசிரியர் ந. பார்த்திபன் வெளியிட்டு வைக்க பிரதம விருந்தினர் பெற்றுக் கொண்டார்.
இந்த பத்திரிகை பிளெட்ஜ் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தால் மாதம் ஒரு தடவை பனைவள மேம்பாட்டை மையப்படுத்தி வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
