Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கடற்தொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளார் – நா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மே 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும் தெரிவிக்காத நிலையில் , கடற்தொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் விதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு பிரதி அமைச்சரின் பங்கேற்புடன் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.

அதில் இராணுவ தரப்பினர் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவொரு சாதகமான பதிலையும் தெரிவிக்காமையே கூட்டம் நிறைவடைந்துள்ளது.

மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு முடிவினையும் சாதகமாக எடுக்காமல் , காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் பல சமயங்களில் திட்டவட்டமாக நிராகரித்தும் , சில விடயங்களில் பரிசீலிப்போம் என தட்டிக்கழிக்கும் பதிலையும் கூறியுள்ளனர் . மக்கள் எதிர்ப்பார்க்கும் எந்தவொரு விடயமும் சாதகமாக முடிவெடுக்கப்படவில்லை.

ஆனால் மூடிய அறைக்குள் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் , கடற்தொழில் அமைச்சர் வெளியே வந்து ஊடகங்களுக்கு முன்னால், சாதகமான பல விடயங்கள் நடைபெற்றுள்ளதாகவும் , விரைவில் தீர்வுகள் காணப்படும் என அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார்.

இந்த பொய்யை மக்கள் மட்டத்தில் விதைக்க தான் தமது கட்சி சாராத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வில்லை. அதேபோல வலி. வடக்கு பகுதி தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரை அழைத்து இருக்க வேண்டும். அவர்களையும் அழைக்கவில்லை.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை அழைக்காது மூடிய அறைக்குள் மக்கள் பக்கம் இருந்து பேச கூடிய விடயங்களை பேசாது வெளியே வந்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் பொய்யை சொன்னது கண்டிக்கப்பட கூடிய விடயம் என மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி நன்னீர் இறால் தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்!
அடுத்த செய்தி அநுராதபுர சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் நாளைய தினம் அகழ்வுப்பணி ஆரம்பம்

மே 14, 2025
இலங்கை

மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற கில்லாடி யுவதி

ஜனவரி 19, 2026
இலங்கை

திருவெம்பா விரதத்தை முன்னிட்டு, யாழில் பாதயாத்திரை.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் கடற்படையினர் 5 பேர் மாயம்!

நவம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?