Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நன்னீர் இறால் தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

மே 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் நன்னீர் இறால் தொழில்துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அதிக வருமானம் தரும் ஒரு வணிகத்துறையாக மாற்றுவதற்காக தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) விசேட திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

கௌரவ ஜனாதிபதி அவர்களினால் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட 25 மில்லியன் ரூபா நிதியின் கீழ், பாரம்பரிய முறைகளை மாற்றி, தீவின் பிரதான நீர்த்தேக்கங்களை மையமாகக் கொண்டு இந்த புதிய தொழில்நுட்ப வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இறால் குஞ்சுகளை (Post-larvae) நேரடியாக நீர்த்தேக்கங்களில் விடுவிப்பதற்குப் பதிலாக, “கூடு முறை” (Cage system) மூலம் ஒருமாத காலம் பூர்வாங்க வளர்ச்சியைப் பெறச்செய்து விடுவிப்பதால், இதற்கு முன்னர் ஒரு கிலோ இறாலைப் பெறுவதற்கு 300-400 குஞ்சுகள் தேவைப்பட்ட போதிலும், தற்போது அது 100 வளர்ந்த இறால் குஞ்சுகள் வரை குறைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டமானது முதல் கட்டமாக நாட்டின் ஐந்து இடங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. கிரித்தலே வாவி, அநுராதபுர மாவட்டத்தின் இரண்டு குளங்கள் மற்றும் வட மாகாணத்தின் இரண்டு குளங்களை மையமாகக் கொண்டு இச்தத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் புதுமுறிப்பு மற்றும் அக்கராயன் குளம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புது முறிப்பு குளத்தில் கூடு மூலம் வளர்க்கப்பட்ட இறால் குஞ்சுகள் குளத்தில் இன்று விடப்பட்டன.தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நீர்வாழ் உயிரினவளர்ப்பாளர் அஜித் சிறிகுமார கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரின் இணைப்பாளர் மருங்கன் மோகன்,நீர் உயிரினச்செய்கை விரிவாக்கல் உத்தியோகத்தர் ம.மதுசன்,மீனவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகவுள்ளார் ஸ்டீவன் கில்போ
அடுத்த செய்தி கடற்தொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளார் – நா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

நவம்பர் 28, 2025
இலங்கை

ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

பிப்ரவரி 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் கைதான நான்கு மின்சார சபை உத்தியோகத்தர்கள்

ஜனவரி 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பயணிகள் பேருந்துகள் 48 மணிநேரத்திற்குள் தகுதி சான்றிதழ் பெறவேண்டும் இது சாத்தியமா??

செப்டம்பர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?