கியூபெக் மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி வரும் கடுமையான வாழ்க்கைச் செலவின உயர்வை (Cost of Living) எதிர்கொள்வதற்கு தம்மால் அறிவிக்கப்பட்டு வரும் நிதியுதவித் திட்டங்கள் முற்றிலும் அவசியமானவை என்று, மாகாணத்தின் முதல்வர் கிறிஸ்டினா பிரெஷெட் (Christine Fréchette) உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
கியூபெக் மாகாண நிதி அமைச்சர் எரிக் ஜிரார்ட் (Eric Girard) பிரெஷெட்டுக்கு எழுதிய ரகசிய எச்சரிக்கைக் கடிதம் அண்மையில், ஊடகங்கள் வழியாக பொதுவெளியில் கசிந்தது
கியூபெக் மக்கள் நிதியை மோசமாகக் கையாளும் ஒரு தலைவரை விரும்பவில்லை எனவும் மாறாகப் பொறுப்புள்ள ஒரு முதல்வரையே எதிர்பார்க்கிறார்கள்” அந்த ரகசிய எச்சரிக்கைக் கடிதத்தில், எரிக் ஜிரார்ட் குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்தபோதே, கியூபெக் முதல்வர் பிரெஷெட் இந்த பகிரங்கப் பதிலை வழங்கியுள்ளார்.
கியூபெக் முதல்வர் பிரெஷெட்டினால் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய சலுகைகள் மூலம், மாகாணத்திலுள்ள சுமார் 75,000 சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கான வரிகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
