சீரற்ற காலநிலையால் நுவரெலியாவின் பல இடங்களில் இன்று காலை கடும் பனிமூட்டமாக இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வீதிகளில் வாகனங்கள் வரும் வேளையில் அதனை மூடி மறைக்கும் அளவிட்கு பனி சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா கண்டி வீதி, நுவரெலியா ஹட்டன் வீதி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
