Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

வன்முறையிலிருந்து தப்பியோடும் கனேடியப் பெண்களுக்கு, சொந்த நாட்டுப் புகலிடங்களில் இடம் மறுக்கப்படும் அவலம்!

மே 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் குடும்ப வன்முறைகள் மற்றும் நெருங்கிய நபர்களினால் நிகழ்த்தப்படும் வன்முறைகளில் இருந்து தப்பித்து, அவசரப் பாதுகாப்பைத் தேடிவரும் பெண்களுக்குத் தற்காலிகப் புகலிடங்களில் இடம் மறுக்கப்பட்டு வருவதாக, அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் புகலிடங்கள், தொடர்ச்சியான நிதிப் பற்றாக்குறை, முறையான வளங்கள் இல்லாமை மற்றும் மலிவு விலை வீட்டு வசதித் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக, தங்களின் கொள்ளளவை மீறிச் செயல்பட்டு வருகின்றன.

இதனாலேயே, அவசரப் பாதுகாப்பைத் தேடிவரும் பெண்களுக்கு, அங்கு இடம் மறுக்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றக் குழு மற்றும் கனடா பெண்கள் புகலிடங்கள் அமைப்பு (Women Shelters Canada) ஆகிய இரு வேறு உயர்மட்ட அமைப்புகள் நடத்திய புதிய தேசிய ஆய்வுகளிலேயே இவ்விவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் இயங்கும் இடைக்காலப் பராமரிப்பு இல்லங்கள் (Transition Houses) மற்றும் புகலிடங்களின் செயல்பாட்டு எல்லை குறித்தும், அவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் நடத்தப்பட்ட முதலாவது விரிவான தேசிய அளவிலான ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வறிக்கையின்படி, கனடாவிலுள்ள தற்காலிகப் புகலிடங்களில் படுக்கை வசதிகள் மற்றும் அறைகளின் எண்ணிக்கையை விட, அதிகமான பெண்களும் குழந்தைகளும் தஞ்சமடைந்துள்ளனர்.

நாட்டில் மலிவு விலை வீடுகளின் பற்றாக்குறை காரணமாக, வன்முறையிலிருந்து தப்பி வரும் பெண்களுக்குச் செல்ல வேறு இடமில்லாத சூழல் நிலவுகிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட புகலிடங்களில், 40% சதவீதமான புகலிடங்கள் தாம் எப்போதும் முழுமையான கொள்ளளவிலேயே இயங்குவதாகத் தெரிவித்துள்ளன.

இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், பாலினச் சமத்துவ அமைச்சர் மரியம் மான்செஃப் (Maryam Monsef), கனடா பெண்கள் புகலிடங்கள் அமைப்பின்  செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக சுமார் 1.5 மில்லியன் டொலர் நிதியுதவியை தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஓடிடியில் வெளியாகவுள்ள ‘கருப்பு திரைப்படம்”
அடுத்த செய்தி கியூபெக் மற்றும் ஒண்டாரியோவில் விற்கப்பட்ட இளங்கீரைகளை திரும்பப் பெறுமாறு, கனேடிய உணவு ஆய்வு முகவரகம் உத்தரவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள்

ஆகஸ்ட் 15, 2026
கனடா

‘கனடா கம்ப்யூட்டர்ஸ்’இணையதளத்தில் நடந்த சைபர் தாக்குதலில் சுமார் 1,300 வாடிக்கையாளர்களின் ரகசியத் தகவல்கள் திருட்டு

பிப்ரவரி 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் இன்றைய தினம் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!

ஆகஸ்ட் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கள் அவமரியாதையானவை அவை நிறுத்தப்பட வேண்டும்-பிரதமர் மார்க் கார்னி

மார்ச் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?