இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேட்க் கொண்டுள்ளார் இந்திய விமானப்படை தளபதி எயார் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங்.
இதன்படி இந்திய விமானப்படை தளபதி வருகின்ற 21 ஆம் திகதி வரைக்கும் இங்கு இருப்பார் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் இப்பயணம் அமைந்துள்ளது.
இதில் இலங்கையின் விமானப்படை தளபதி, இந்திய விமானப்படை தளபதியை சந்தித்ததுடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
