Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ட்ரம்ப்பை நரகத்துக்கு அனுப்பினால் பரிசுத் தொகை வழங்கப்படும் என ஈரான் அறிவிப்பு

மே 19, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல் 40 நாட்களாக நீடித்த நிலையில், போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மேற்காசிய பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது. இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரை சுட்டு கொலை செய்வதற்கு ஈரான் திட்டமிட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டில் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதுபற்றி தி டெலிகிராப் வெளியிட்டு உள்ள செய்தியில், ஈரானின் தேசிய பாதுகாப்பு ஆணைய தலைவர் இப்ராகிம் அஜிஜி கூறும்போது, ஈரானின் இராணுவ மற்றும் பாதுகாப்பு படையினரின் பதிலடி நடவடிக்கை என்ற பெயரில் வரைவு மசோதா ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாரித்து வருகின்றனர்.

இதன்படி ட்ரம்ப்பை படுகொலை செய்யும் நபருக்கு யூரோ மதிப்பில் 5 கோடி (இந்திய மதிப்பில் ரூ.561 கோடி) பரிசு தொகை வழங்கப்படும் என அந்த மசோதா தெரிவிக்கின்றது.

ட்ரம்ப், நெதன்யாகு மற்றும் அமெரிக்க கடற்படை தளபதி பிராட் கூப்பர் ஆகிய 3 பேரும் கொமெய்னி படுகொலைக்கு முக்கிய பின்னணியாக இருந்தவர்கள்.

அந்த தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டவர்கள். இதனால், இதற்கான சரியான பதிலடியை அவர்கள் எதிர்கொண்டே ஆக வேண்டும் என அஜிஜி கூறியுள்ளார். இவர்கள் 3 பேரையும் நரகத்திற்கு அனுப்பி வைப்பவர்களுக்கு பரிசு தொகையை கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதேபோன்று, ஈரான் பாராளுமன்ற தேச பாதுகாப்பு குழுவின் துணை தலைவரான மஹ்மூத் நபாவியன் கூறும்போது, ஈரான் அல்லது அதன் மைய தலைமைக்கு எதிரான எந்தவொரு நேரடி இராணுவ தாக்குதலுக்கும் விரைவான பதிலடி கொடுக்கப்படும்.

அது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் மட்டும் நில்லாமல், அவர்களுடன் கூட்டணியாக சேர்ந்து செயல்படும் அரபு நாடுகளின் மீதும் இந்த தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கும் வகையில் கூறினார்.

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி கடுமையாக தாக்கின. இதில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். இதற்கு பழி தீர்ப்போம் என ஈரான் அப்போது சூளுரைத்தது.

எனினும், ஈரானில் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த சூழலில், ஈரானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி வைத்து உள்ளது.

முந்தைய செய்தி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை தளபதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்!

ஜூலை 18, 2025
அண்மைய செய்திகள்உலகம்

தென்மேற்கு பாகிஸ்தானின்ரயில் கடத்தல் -பணையக் கைதிகள் அனைவரும் மீட்பு..!!

மார்ச் 13, 2025
உலகம்

பாகிஸ்தானில் நில அதிர்வு

டிசம்பர் 20, 2025
உலகம்

காசாவின் அல்-அக்ஸா வைத்தியசாலை மீதான இஸ்ரேலின் தாக்குதலில் நால்வர் பலி

ஏப்ரல் 1, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?