Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யுத்தக் குற்றவாளிகள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும் – ஈ.பி.டி பி

மே 15, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் காரணமாக மக்கள் உயிரிழந்தமை விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

“இந்த மண்ணிலே இடம்பெற்ற ஈழ விடுதலைப் போராட்டம் காரணமாக உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற நிகழ்வுகளிலும் பங்குபற்ற வேண்டும் என்ற ஆலோசனை எங்களுடைய தலைமையினால் எங்களுடைய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஈழ விடுதலைப் போராட்டம் காரணமாக உயிரிழந்த அனைவரும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.

அதற்கான பொதுவான தினம் நிர்ணயிக்கப்பட்டு அனைவரும் நினைவ கூரப்பட வேண்டும் என்ற தனிநபர் பிரேரணை கூட நாடாளுமன்றில் எமது செயலாளர் நாயகததினால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

அந்த அடிப்படையிலே, இந்த நாட்டிலே இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, முள்ளிவாய்க்கால் பகுதியிலே ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றாரகள். அவர்கள் அனைவரும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.

உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு, உயிரிழந்த தங்களுடைய உறவுகளை நினைவுகூருவதற்கு முழுமையான உரிமை இருக்கின்றது என்பதையும் நாங்கள் வலிறுத்துகின்றோம்.

அதேவேளை இறுதி யுத்தத்தின்போது, யுத்த குற்ற மீறல்கள் இடம்பெற்று இருக்கின்றன. யுத்த குற்றமீறல்களில் இரண்டு தரப்பினரும் ஈடுப்பட்டிருக்கின்றனர் என்பதை, சர்வதேச நிபுணர் குழுவின் தருஸ்மன் அறிக்கை போன்ற பல்வேறு அறிக்கைகள் உறுதிப்படுத்துவதுடன், அந்த பிரதேசத்தில் இருந்து தப்பி வந்த மக்களும் வெளிப்படுத்துகின்றனர் என்ற அடிப்படையில் யுத்த குற்றம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் தொடர்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

ஆனால் எங்களுடைய மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளை பெற்றுக்கொடுக்காத, எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான தற்போதைய அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு இடையூறாக அமையக்கூடிய சொல்லாடல்களை முன்வைத்து முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் நலன்களை முன்னிறுத்திய அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொண்டு கீழ்த்தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது என தெரிவித்தார்.

முந்தைய செய்தி மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
அடுத்த செய்தி மன்னாரை சென்றடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வேலணை மத்திய கல்லூரி மைதானத்திற்கு தீ வைப்பு

அக்டோபர் 5, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் அதிநவீன இராணுவ ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவவுள்ளதாகக் மத்திய அரசு அறிவிப்பு.

ஜூலை 15, 2026
இலங்கை

கல்முனை பகுதியில் போலி நகையை அடகு வைக்க சென்றவர் கைது!

நவம்பர் 21, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தடை – ஆப்கானிஸ்தானில் அதிரடி உத்தரவு

ஜூன் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?