Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவர் மீதான குற்றச்சாட்டு சட்டவலுவற்றது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மே 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைவர் தமாரா தெர்மிட்டஸ் (Tamara Thermitus) மீதான குற்றச்சாட்டுகளைக் கொண்டமைந்த, 2018-ஆம் ஆண்டு ஓம்புட்ஸ்மேன் (Ombudsperson) அறிக்கை சட்டவலுவற்றது என கியூபெக் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2017-ஆம் ஆண்டு கியூபெக் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் கறுப்பினப் பெண் தமாரா தெர்மிட்டஸ் ஆவார். அவர் பதவியேற்ற சில காலத்திலேயே, நிர்வாகச் சீர்கேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஓம்புட்ஸ்மேன் அமைப்பால் குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த சர்ச்சைக்குரிய அறிக்கையினால் தமாரா 2018-ஆம் ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லூகாஸ் கிரானோசிக் (Justice Lukasz Granosik), ஓம்புட்ஸ்மேன் அறிக்கை நியாயமற்றது மற்றும் குறைபாடுகள் உடையது எனத் தீர்ப்பளித்தார்.

தமாரா தனது தரப்பு விளக்கத்தைக் கூறுவதற்கு முன்பே, அந்த அறிக்கை மாகாண நீதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப் பட்டமையானது, நீதிக்கு எதிரானது என நீதிபதி சுட்டிக்காட்டினார் தமாராவுக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்களின் கூற்றுகள் முரணாக இருந்த போதிலும், ஓம்புட்ஸ்மேன் அவற்றை ஏன் நம்பினார் என்பதற்குப் போதுமான காரணங்கள் இல்லை என்பதையும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் ஓம்புட்ஸ்மேன் அமைப்பு தனது அதிகார வரம்பையும், முறையான விசாரணை விதிகளையும் மீறியுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த தமாரா தெர்மிட்டஸ்,இது நீதிக்கான பயணத்தின் முதல் படிஎன்று கூறினார்.

இருப்பினும், கடந்த 9 ஆண்டுகளாகத் தான் அனுபவித்த மன உளைச்சலும், இழந்த கௌரவமும், முடக்கப்பட்ட தனது தொழில் வாழ்க்கையும் மீண்டும் கிடைக்காது என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

முந்தைய செய்தி நாடு சிதறுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது – ஜேசன் கென்னி
அடுத்த செய்தி கியூபெக்கில் ‘டிஜிட்டல் சுகாதாரப் பதிவு’ திட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியல் மாநகராட்சி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

மார்ச் 12, 2026
கியூபெக்

கியூபெக் மதச்சார்பற்ற சட்டத்திற்கு எதிரான வாதங்கள் அதிர்ச்சியானவை எனச் சாடிய உச்சநீதிமன்ற நீதியரசர்

மார்ச் 26, 2026
கியூபெக்முதன்மை செய்தி

டிஜிட்டல் சுகாதார சாதனை’ திட்டம்  பாதுகாப்பானது என உறுதிப்படுத்த வேண்டும் – கிறிஸ்டின் ஃப்ரெச்செட்

ஏப்ரல் 24, 2026
கியூபெக்

மொன்றியல் பள்ளிகளில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால பாதுகாப்பு நடைமுறை நீக்கம்!

டிசம்பர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?