நாட்டில் சீரற்ற வானிலை நிலவுகின்ற நிலையில் ஹட்டன் கொழும்பு வீதியின் தியகல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்படி வட்டவளை பகுதியிலும் பெய்த கடும் மழையினால் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்ட காரணத்தினால் போக்குவரத்து ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதுடன், வீதியில் சரிந்துள்ள மண்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பகுதிகளில் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தியுள்ளது.
