Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள அஞ்சல் வாகன சேவை

மே 8, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த அஞ்சல் வாகன சேவை குறைபாட்டிற்கு தீர்வாக இன்று முதல் அஞ்சல் வாகனம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (08) அஞ்சல் வாகன சேவை ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இதன் மூலம் தீர்வு கிடைத்துள்ளதாக நம்பிக்கை வெளியிட்டார்.

புதுக்குடியிருப்பிற்கான அஞ்சல் பரிவர்த்தனைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை அஞ்சல் திணைக்கள வாகனம் மூலம் இடம்பெற்று வந்ததாகவும், அதன் பின்னர் உரிய வாகன வசதி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அஞ்சல் விநியோக தாமதங்களால் நேர்முகத் தேர்வு அழைப்புகள் உள்ளிட்ட முக்கிய கடிதங்கள் கூட தாமதமாக மக்களிடம் சென்றடைந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கவனம் செலுத்தியதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் எழுத்து மூலமாக அறிவித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த மாதம் பாராளுமன்ற அமர்விலும் இவ்விடயம் முன்வைக்கப்பட்டதாகவும், அப்போது சம்பந்தப்பட்ட அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அஞ்சல் வாகனம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்ததாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்றையதினம் (07) பாராளுமன்றத்தில் மீண்டும் இவ்விடயம் குறித்து குரல் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், “முல்லைத்தீவு மாவட்டம் மீண்டும் புறக்கணிக்கப்படுகின்றதா?” அஞ்சல் வாகனம் ஏன் அனுப்பப்படவில்லையென கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து உடனடியாக அஞ்சல் வாகனம் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

வவுனியாவிலிருந்து இன்று அதிகாலை புறப்பட்ட அஞ்சல் வாகனம் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு ஊடாக விசுவமடு வரை சேவையில் ஈடுபடவுள்ளதாகவும், இதன் மூலம் விரைவு அஞ்சல் சேவைகளை துரிதமாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் இனிமேல் அஞ்சல் விநியோகத்தில் காலதாமதம் ஏற்படாது என நம்பிக்கை வெளியிட்ட அவர், இச்சேவையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்த பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அஞ்சல் மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் மற்றும் அஞ்சல் திணைக்கள அதிகாரிகளுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி வடக்கு மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு
அடுத்த செய்தி கியூபெக் லிபரல் கட்சியிலிருந்து சோனா லக்ஹோயன் நிரந்தரமாக நீக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வேதன அதிகரிப்பு உடன்பாட்டில் நிலவும் சந்தேகம்

பிப்ரவரி 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

P2P போராட்டத்தின் நாயகர்கள் நாமே-யாழில்.சுமந்திரன் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாத்தளை – கைகாவல பகுதியில் பேருந்து மோதியதில் கிராம உத்தியோகத்தர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 16, 2025
அண்மைய செய்திகள்கனடா

சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவதை முற்றாகத் தடை செய்வதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

ஜூன் 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?