சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி பி.அருகொட இன்றிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.
இதனால் அந்த வெற்றிடத்திற்கு விமல் எஸ்.கே.லியனகம தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமல் எஸ்.கே.லியனகம இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியும் மேலாண்மை சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் செயலாற்றியுள்ளார்.
இந்நிலையில் இவரை இலங்கை சங்கத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் விமல் எஸ்.கே.லியனகம நாளையத்தினம் சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பதவியேற்க உள்ளார்.


