Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

திருக்கோவிலில் பெண் பொலிஸ் அதிகாரியை தாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல்

ஏப்ரல் 26, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் அதிகாரி மீது சாணம் வீசி அவரை கத்தியால் வெட்டி தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கள்ளியந்தீவைச் சேர்ந்த மது போதைக்கு அடிமையாகிய 30 வயதுடைய இளைஞரை எதிர்வரும் 8ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் சனிக்கிழமை (25) உத்தரவிட்டார்.

இது பற்றி தெரியவருவதாவது,

குறித்த பொலிஸ் நிலையத்தில் பெண்கள் பிரிவுக்கு பொறுப்பாக கடமையாற்றி வரும் திருக்கோவிலைச் சேர்ந்த பெண் பொலிஸ் அதிகாரி சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் 3.00 மணியளவில் மதிய உணவுக்காக பொலிஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு சென்று பொலிஸ் நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் சக்தி பாடசாலைக்கு அருகில் மோட்டர் சைக்கிள் ஒன்றில் கத்தியுடன் நின்று கொண்டிருந்த அந்த குறித்த நபர் வீதியில் பிரயாணித்துக் கொண்டிருந்த பெண் பொலிஸ் அதிகாரி மீது மாட்டு சாணம் வீசி எறிந்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதை அவரது மேலதிகாரிக்கு அறிவித்துக் கொண்டார்.

அதன் பின்னர் குறித்த நபரை பெண் பொலிஸ் அதிகாரி பின் தொடர்ந்து கொண்டிருந்த போது குறித்த நபர் மாணிக்க பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வீதியில் கத்தியை சுழற்றி அவரை அச்சுறுத்திக் கொண்டிருந்துள்ளதையடுத்து அவரிடம் இருந்து கத்தியை பறிக்க முற்பட்டபோது பெண் பொலிஸ் அதிகாரி மீது கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்துள்ளதுடன் அவரின் பொலிஸ் யூனிபோமை கிழித்து கொண்டபோதும் ஒருவாறு அவனை மடக்கிடிபித்து கைது செய்து கொண்டதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்தவரை நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது நீதவான் அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த நபர் மது போதைக்கு அடிமையாகியுள்ள அவரை புனர்வாழ்வுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வந்துள்ளனர் இதன் காரணமாக குறித்த பெண் பொலிஸ் அதிகாரி மீது கோபம் கொண்ட அவன் அண்மையில் அவர் வீதியால் செல்லும் போது வைத்தியசாலைக்கு அருகாமையில் வைத்து அவர் மீது செருப்பை வீசி எறிந்ததுடன் அவர் வீதியால் பிரயாணிக்கும் போதும் அவரது வீட்டின் மீதும் தொடர்ந்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில். மலேரியாவால் ஒருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி யாழில்.போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை இலங்கை தற்போது பெற்றுள்ளது-வோல்கர் டர்க்!

செப்டம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இதுவரையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 181 இந்திய மீனவர்கள் கைது!

ஜூலை 14, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

ஜூலை 28, 2025
இலங்கை

எரிபொருள் இருப்பு குறித்து மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அறிவிப்பு!

டிசம்பர் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?