Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் இ.போ.ச சாரதியுடன் முரண்பட்ட நடத்துனருக்கு காலவரையற்ற பணித்தடை

ஏப்ரல் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட தனியார் பேருந்து நடத்துநர் ஒருவருக்கு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் காலவரையற்ற பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த நடத்துநர் இ.போ.ச. சாரதியுடன் முரண்படும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது.

துரிதமாகச் செயற்பட்ட வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, காணொலியை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்தது. ஆரம்பக்கட்ட விசாரணைகளில் குறித்த நடத்துநரின் ஒழுங்கீனமான செயற்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சர்ச்சைக்குரிய நடத்துநருக்குக் காலவரையற்ற பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில், அவர் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினூடாக வழியனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு பேருந்திலும் பணியாற்றுவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பேருந்தின் வழியனுமதிப் பத்திரமானது இரண்டு தினங்களுக்குச் செல்லுபடியற்றதாகும் வகையில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தின் போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரிடையே ஏற்படும் இவ்வாறான ஒழுக்க மீறல்கள், வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகள், மேலதிக கட்டணம் அறவிடப்படுதல் அல்லது பயணிகள் வேறு ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டால், எவ்வித தயக்கமுமின்றித் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி தடையை உடைப்போம் கியூபாவிற்கு தோள் கொடுப்போம் – வவுனியாவில் போராட்டம்
அடுத்த செய்தி யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரோக்கிய உணவகம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சாக்லேட் திருடியதாக சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்ட முதியவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் கைது!

ஆகஸ்ட் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாளை ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்

ஏப்ரல் 19, 2026
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

Google Chrome இன் புதிய Update!

மே 20, 2025
இலங்கை

மட்டக்களப்பு போரதீவுபற்றில் நீரோடையில் வீழந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?