பொலன்னறுவை தம்பால பகுதியில் 17 வயது சிறுமி கோடரியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில் ,
மேலதிக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிய சிறுமி மீது அயல் வீட்டைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர் சிறுமியின் தலையில் கோடரியால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த சிறுமி பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (04) உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தம்பால பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
