மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகின்ற நிலையில் செங்கடல் மற்றும் ஹார்முஸ் நீர்ச்சந்தியின் ஆழத்தில் அமைந்துள்ள 17 மிக முக்கியமான கடலடி கேபிள்கள் (Undersea Cables) தற்போது பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன.
ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான ஒட்டுமொத்த இணையத் தரவுகளில் சுமார் 17 சதவீதத்தை இந்த மெல்லிய கேபிள்களே சுமந்து செல்கின்றன.
இதன்படி மைக்ரோசாப்ட், அமேசான் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் மேற்கொண்டுள்ள பில்லியன் கணக்கிலான AI முதலீடுகளுக்கும், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கும் இவைதான் உயிர்நாடியாக உள்ளன.
2026-ல் அதிகரித்து வரும் பிராந்திய பதற்றங்கள் காரணமாக, இந்த கேபிள்கள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படலாம் அல்லது முடக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஒருவேளை இந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டால், அது உலகளாவிய வங்கிச் சேவைகள், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் AI அமைப்புகளில் பல மாதங்களுக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி, உலகப் பொருளாதாரத்தையே முடக்கும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

