கொழும்பில் இருந்து அக்கரைப்பற்றில் ஒருவருக்கு தனியார் பஸ்வண்டி ஒன்றில் அனுப்பபட்ட சிசிரி கமார பாசலை பெறவந்த அந்த பாசலில் இருந்து 34 கிராம் கொண்ட ஜஸ் போதை பொருளுடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை அக்கரைப்பற்றில் வைத்து இன்று வியாழக்கிழமை 926) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரிய வருவதாவது,
கொழும்பில் இருந்து அக்கரைப்பற்றுக்கு இடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றில் கொழும்பில் வைத்து பேருந்தில் பொதி செய்யப்பட்டு அதில் தோலைபேசி இலக்கம் பொறிக்கப்பட்ட சிசிடிவி கேமரா ஒன்றை வழங்கி அதனை அக்கரைப்பற்றில் தொலைபேசி இலக்கத்தில் இருப்பவர் பெற்றுக் கொள்வார் என பொதியை ஒருவர் பேருந்து நடத்துனரிடம் வழங்கி சென்றுள்ளார்.
இந்த கடத்தல் தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதனர் பகீரதன் தலைமையிலான குழுவினர் சம்பவ தினமான இன்று அதிகாலை 3 மணி தொடக்கம் நகர்பகுதியில் டிதாடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குறித்த பேருந்து அக்கரைப்பற்றை வந்தடைந்ததும் நிறுத்தி வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து பேருந்து நடத்துனர் குறித்த பொதியில் உள்ள தொலைபேசியில் தொடர்புக் கொண்டு தாங்கள் இந்த இடத்தில் இருக்கின்றோம் கொழும்பில் இருந்து அனுப்பபட்ட சிசிடிவி கேமராவை எடுத்து செல்லுமாறு தெரிவித்தார்.
குறித்த நபர் பொதியை வாங்கி கொண்ட போது அங்கு மறைந்திருந்த பொலிசார் சுற்றிவளைத்து பொதியை வாங்கிய 20 வயதுடைய இளைஞனை கைது செய்ததுடன் கேமராவில் சூட்சகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 34 கிராம் ஜஸ் போதை பொருளை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரிடம் விசாணைகளை மேற் கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
