Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

புலிமச்சிநாதிகுளத்தில் காணாமல்போனவர் சடலமாக மீட்பு

ஆகஸ்ட் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட புலிமச்சிநாதிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமானநிலையில் காணாமல்போன சிவபாதம் ஸ்ரீகாந்தன் என்னு குடும்பஸ்தர் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாங்குளம் பொலிஸாரிடம் 04.08.2025இன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் காணாமல்போன குடும்பஸ்தர் புலிமச்சிநாதிகுளத்தில் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிமச்சநாதிகுளம் பகுதியில் கடந்த 03.08.2025 நேற்று சிவபாதம் ஸ்ரீகாந்தன் என்ற 43வயதான குடும்பஸ்தர் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் குறித்த காணாமல் போன குடும்பஸ்தருடைய மேற்சட்டையும், கைத்தொலைபேசியும் புலிமச்சிநாதிகுளக் கட்டிலிருந்து மீட்கப்பட்டிருந்ததுடன், இவ்வாறு காணாமல் போன குடும்பஸ்தரின் விடயத்தில் பலசந்தேகங்களும் காணப்பட்டன.

அதேவேளை 03.08.2025நேற்று காணாமல் போனவரது உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் இணைந்து புலிமச்சிநாதிகுளத்தில் காணாமல்போனவரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் காணாமல் போனவரை இனங்காணமுடிந்திருக்கவில்லை.

இத்தகையசூழலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு இதுதொடர்பில் தெரியப்படுத்தப்பட்டிருந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் 04.08.2025இன்று காலையில் காணாமல் போனவருடைய வீட்டிற்குச் சென்று அவருடைய குடும்பத்தாருடனும், உறவினர்களுடனும் கலந்துரையாடி நிலமைகளைக் கேட்டறிந்தார்.

அத்தோடு இது தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளருடனும் கலந்துரையாடி இது தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, பொலிஸ் தலைமையக ஆய்வாளரைச் சந்தித்து காணாமல் போனவர் தொடர்பில் துரித விசாரணைகளையும், துரித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார்.

அந்தவகையில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உறவினர்கள், ஊர்மக்களுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையொன்று 04.08.2025இன்று மேற்கொள்ளப்படுமென மாங்குளம் பொலிஸ்தலைமையக ஆய்வாளர் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு உத்தரவாதமளித்திருந்தார்.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது வலியுறுத்தலுக்கமைய காணாமல் போனவரைத் தேடுவதற்குரிய செயற்பாட்டில் மாங்குளம் பொலிசார் ஈடுபடத் தயாரானநிலையில், குறித்த காணாமல் போனவர் சடலமாக புலிமச்சினாதி குளத்தில் இனங்காணப்பட்டுள்ளார்.

முந்தைய செய்தி டிஜிட்டல் தேசிய பிறப்புச்சான்றிதழ் வழங்கி வைப்பு
அடுத்த செய்தி செம்மணி பகுதியில் இன்று ஸ்கேன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். சிகிச்சை பெற்ற சந்தேக நபர் தப்பியோட்டம் – பொலிஸ் பாதுகாவலர் பணி இடை நீக்கம்!

ஆகஸ்ட் 27, 2025
அண்மைய செய்திகள்கனடா

OpenAI நிறுவனத்தின் மீது மத்திய அரசு கடும் அதிருப்தி!

பிப்ரவரி 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வேண்டுகோள்!

நவம்பர் 29, 2025
இலங்கை

யாழில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஜூன் 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?