Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு நிதியுதவி

மார்ச் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் டொலர் நிதியுதவியை
480 மில்லியன் டொலராக அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் டொலரை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர்,
இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி எவ்வாறான ஒத்துழைப்புகளை
வழங்க முடியும் என்பது குறித்து இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

டித்வா அனர்த்தத்திற்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

அனர்த்தத்திற்குப் பிந்தைய நிலைமை மற்றும் தற்போதைய மத்திய கிழக்கு போர்ச் சூழலுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் பாராட்டினார்.

டிட்வா புயலினால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய மலைநாட்டின் நீர் நிலைகளைப் பாதுகாப்பதன் மூலம் மீண்டும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் வங்கித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் தெற்காசிய பிராந்திய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோனா சிரேஸ்தா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழிலாளர் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி சுரேஷ் சலே திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
அடுத்த செய்தி வாகன QR குறியீட்டு மோசடி தொடர்பில் ஒருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் உணவகங்கள் மீது தொடரும் சட்ட நடவடிக்கை

பிப்ரவரி 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இடம் பெற்ற இலவச சட்ட ஆலோசனை முகாம்!

மே 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் 10 லீட்டர் கசிப்புடன் பெண்ணொருவர் கைது

நவம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

811 மரணதண்டனை கைதிகள் இலங்கை சிறையில்!

பிப்ரவரி 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?