Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கோல்டன் ஸ்கொயர் மைல் கொலை வழக்கில் அறிவிக்கப்பட்ட தீர்ப்பு

மார்ச் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் வசதி படைத்த பகுதியாகக் கருதப்படும் கோல்டன் ஸ்கொயர் மைல் (Golden Square Mile) பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், மாணவர் விசாவில் கனடா வந்திருந்த 18 வயது இளைஞர் ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மொன்றியலின் மையப்பகுதியிலுள்ள டு மியூசி (Du Musée) வீதியில் அமைந்திருந்த ஒரு குடியிருப்பில் ஆர்தர் கெடிக்யன் (Arthur Ketikyan) என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, அதே ஆண்டு கோடைகாலத்தில் கல்வி கற்பதற்காகக் கனடா வந்திருந்த ஒரு மாணவரைப் பொலிஸார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை இன்று காலை மொன்றியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது, தான் கொலை செய்ததை அந்த இளைஞர் ஒப்புக்கொண்டார். கனடியச் சட்டப்படி, இரண்டாம் நிலைக் கொலைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவது வழமை என்று கூறப்படுகின்றது. இருப்பினும், அவர் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பிணையில் (Parole) வெளிவர முடியும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதிபதிக்கே உண்டு என்ற நிலை காணப்படுகின்றது.

இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு மற்றும் பிணை தொடர்பான காலக்கெடு குறித்த விவரங்கள் வரும் மே மாதம் அறிவிக்கப்படும் என நீதிபதி அலெக்சாண்டர் புஷர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி இலங்கை கடற்படையினரால் 53 பேர் கைது
அடுத்த செய்தி மொன்றியல் மாநகரத்தின் அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது – சோரயா மார்டினெஸ் ஃபெர்ராடா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி: பெட்ரோல் வரிச் சலுகை ரத்து” – நிதியமைச்சர் எரிக் ஜிரார்ட்

மார்ச் 19, 2026
கியூபெக்

மொன்றியல் பிராந்திய மூன்றாவது கிளையை மூடப்போகும் வால்மார்ட் கனடா நிறுவனம்

ஏப்ரல் 14, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோ வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

அக்டோபர் 18, 2025
கனடாமுதன்மை செய்தி

புதிய கிளப்ஹவுஸை அமைக்க வின்ட்சர் நகர சபை ஒப்புதல்

செப்டம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?