Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் அன்பளிப்பு – வலுக்கும் எதிர்ப்பு

மார்ச் 17, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் அனுமதி வழங்கிய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமது கிறிஸ்தவ சபையின் பைபிள் நூலினை வழங்குவதற்கு நிறுவனம் ஒன்று வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரிடம் அனுமதி கோரிய நிலையில், பாடசாலைகளில் மாணவர்களுக்கு நூலினை அன்பளிப்பு செய்வதற்கு அனுமதி வழங்கி இருந்தார்.

குறித்த அனுமதி கடிதம் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாடசாலைக்குள் மத மாற்றம் செய்யும் நோக்குடன் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் , தற்போது குறித்த கிறிஸ்தவ சபையை சேர்ந்த மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குமாறு கடிதம் மூலம் பைபிளை வழங்க முற்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தல் பாடசாலை மட்டங்களில் எவ்வாறு பின்பற்றப்படும் , கிறிஸ்தவ சபையை சேர்ந்தவர்களுக்கு எனில் , அதனை அவர்களின் சபைகள் ஊடாகவே வழங்க நடவடிக்கை எடுக்காது எதற்காக பாடசாலைகளில் வைத்து வழங்க வேண்டும்? பாடசாலைகள் ஊடாக வழங்கப்பட காரணம் மாணவர்களை மதமாற்றம் செய்யும் நோக்கு என்பதனை வலுவாக சந்தேகிக்க கூடிய ஏது நிலைகள் காணப்படுவதனால் பாடசாலைகளில் பைபிளை வழங்குவதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரி வருகின்றனர்.

இந்நிலையில் வடமாகாண பாடசாலை மாணவர்கள் மத்தியில் கிறிஸ்தவ சபையின் பைபிள் வழங்கப்படுவதனை வடமாகாண ஆளுநர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் அத்தனையும் மீறி பைபிள் மாணவர்கள் மத்தியில் வழங்கப்பட்டால் , அவ்வாறு வழங்கப்படும் பைபிளை தீயிட்டு கொளுத்துவோம் என சிவசேனை அமைப்பினை சேர்ந்த சிறிந்தீரன் மற்றும் மாதவன் ஆகியோர் யாழில். நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

அவ்வாறான நிலையில் தற்போது யாழ் , நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பைபிள் வழங்கப்படுவதற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி யாழ். பல்கலை கறுப்பு கொடி விவகாரம் – விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள மூவர்
அடுத்த செய்தி யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.பல்கலைக்கழக வெசாக் கூட்டை முகமூடி அணிந்த இருவர் உடைத்துள்ளனர்

ஜூன் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலையில் மீனவர் தாக்குதலுக்கு எதிராக வீதி மறியல்!

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை வீழ்ச்சி -வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

டிசம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் 15 வது நாளாக தொடரும் போராட்டம்!

ஆகஸ்ட் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?