தேசத்தைக் கட்டியெழுப்பும் வளமான கிராமம் எனும் தேசிய வேலைத்திட்டத்தின் சமூக உற்பத்தித்திறன் மாதிரிக் கிராமங்களை ஆரம்பிப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணம் பூம்புகார் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் குறித்த வேலைத்திட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை இலங்கையிலுள்ள அனைத்து சமூக உற்பத்தித்திறன் மாதிரிக் கிராமங்களிலும் முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் மாதிரிக் கிராமமாகத் தெரிவு செய்யப்பட்ட பூம்புகார் கிராமத்தில் அங்குரார்ப்பண நிகழ்வு பூம்புகார் அ.த.க பாடசாலையில் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனின் பங்கேற்புடன் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலாளர் உ.யசோதா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
