கியூபெக் நகருக்கு அருகில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘குரோஸ்-ஈல்’ (Grosse-Île) தீவில் பெருகி வரும் மான்களை, வேட்டையாடிக் குறைப்பதற்கான (Deer Cull) புதிய திட்டத்தைப் ‘பார்க்ஸ் கனடா’ திணைக்களம் முன்மொழிந்துள்ளது.
இந்த தீவின் இயற்கைச் சூழல் மற்றும் விமானப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செயின்ட் லாரன்ஸ் ஆற்றில் அமைந்துள்ள இந்தச் சிறிய தீவில் தற்போது சுமார் 90-க்கும் மேற்பட்ட வெள்ளை-வால் மான்கள் (White-tailed deer) வசித்து வருகின்றன.
அளவுக்கு அதிகமான மான்களால் தீவில் உள்ள அபூர்வ வகை தாவரங்கள் மேய்ச்சல் மற்றும் மிதிபடுதல் காரணமாக அழிந்து வருகின்றன.
தீவில் உள்ள விமான ஓடுதளத்தில் மான்கள் அடிக்கடி குறுக்கிடுவதால், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் வான்வழிப் பயணத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மான்களை விரட்டப் பயன்படுத்தப்பட்ட ஒலி மற்றும் ஒளி உத்திகள் தோல்வியடைந்த நிலையில், இந்த வேட்டையாடும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
