Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

சட்டப்போராட்டத்திற்கு 1.6 மில்லியன் டொலர் செலவு செய்துள்ள மொன்றியல் ஆங்கில பாடசாலைச் சபை

மார்ச் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண அரசின் சர்ச்சைக்குரிய மொழிச் சட்டம் (Bill 96) மற்றும் மத அடையாளத் தடைச் சட்டம் (Bill 21) ஆகியவற்றுக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடுவதற்காக, ஆங்கில மொன்றியல் பாடசாலைச் சபை (EMSB) இதுவரை 1.67 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியைச் செலவிட்டுள்ளது.

அந்த பாடசாலைச் சபை வெளியிட்டுள்ள நிதி அறிக்கையின்படி, இரண்டு முக்கிய சட்டங்களுக்கு எதிராக இந்த நிதி செலவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பணியிடங்களில் மத அடையாளங்களை அணியத் தடை விதிக்கும் இந்த Bill 21 சட்டத்தை எதிர்த்துப் போராட 1.1 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

பிரெஞ்சு மொழியை முதன்மைப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட புதிய மொழிச் சட்டமான Bill 96 க்கு எதிராக போராட இதுவரை 5,70,000 டொலர் செலவாகியுள்ளது.
இந்தச் சட்டங்கள் எமது சமூகத்தின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்றன என்று ஆங்கில மொன்றியல் பாடசாலைச் சபையின் தலைவர் ஜோ ஒர்டோனா (Joe Ortona) தெரிவித்துள்ளார்.

தகுதியான ஆசிரியர்களைப் பணியமர்த்துவதற்கும், மாணவர்களுக்குச் சரியான முறையில் சேவையாற்றுவதற்கும் இந்தச் சட்டங்கள் தடையாக இருப்பதாகவும், அதனாலேயே இந்தச் சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கல்விக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய பொதுமக்களின் வரிப்பணம், கியூபெக் மாகாண அரசுக்கு எதிரான நீண்டகால நீதிமன்ற வழக்குகளுக்குச் செலவிடப்படுவது குறித்து ஒரு தரப்பினர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இந்த வழக்குகள் தற்போது கியூபெக் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில், இவை அடுத்ததாகக் கனடிய உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கியூபெக்கில் வேலைவாய்ப்பை இழந்த 57,000 பேர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் கடத்தப்பட்ட இரு குழந்தைகள் – ஆம்பர் எச்சரிக்கை விடுத்த கியூபெக் காவல்துறை

மார்ச் 22, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசாங்கம் முன்வைத்த கடுமையான புதிய சட்டம்!

டிசம்பர் 3, 2025
கியூபெக்

பெர்னார்ட் டிரைன்வில்லுக்கு ஆதரவு தெரிவிக்கும் கியூபெக் நீதி அமைச்சர்

ஏப்ரல் 7, 2026
கியூபெக்

மீண்டும் எழுச்சி பெற்று வரும் கியூபெக் லிபரல் கட்சி

மார்ச் 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?