கியூபெக் மாகாணத்தின் இடதுசாரி மற்றும் தனிநாடு ஆதரவுக் கட்சியான ‘கியூபெக் சொலிடேர்’ (Québec Solidaire – QS) தனது 20-வது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடியது.
வெறும் சாதாரண மக்கள் இயக்கமாகத் தொடங்கி, இன்று கியூபெக் சட்டமன்றத்தில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக வளர்ந்துள்ள இக்கட்சியின் பயணம், அரசியலில் ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
2006-ஆம் ஆண்டு தீவிர இடதுசாரி அமைப்புகளின் இணைப்பால் உருவான இக்கட்சி, சாமானிய மக்களின் குரலாகத் தன்னை அடையாளப்படுத்தி இருந்தது.
2008-ஆம் ஆண்டில் இக்கட்சியின் சார்பில் அமீர் காதிர் முதன்முறையாக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தபோது, இக்கட்சி ஒரு ‘மாற்று அரசியல்’ சக்தியாகப் பார்க்கப்பட்டது.
இன்று 11 சட்டமன்ற உறுப்பினர்களுடன், இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற மக்களின் பேராதரவைப் பெற்ற கட்சியாக இது உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
