புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) தலைமைப் பதவிக்கான இறுதி நேரடி விவாதம் நேற்று நடைபெற்றது.
புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.
அந்த தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற இந்த விவாதத்தில், ஐந்து வேட்பாளர்கள் பங்கேற்றுத் தங்களது கொள்கைகளை முன்வைத்தனர்.
கடந்த தேர்தலில் வெறும் 7 இடங்களை மட்டுமே பெற்றுப் பின்னடைவைச் சந்தித்த கட்சியை மீண்டும் எப்படிக் கட்டியெழுப்புவது என்பதே விவாதத்தின் மையப்பொருளாக இருந்தது.
விவாதத்தின் ஒரு கட்டத்தில், ரோப் ஆஷ்டன் மற்றும் ஆவி லூயிஸ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த விறுவிறுப்பான விவாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு மார்ச் மாதம் 9-ஆம் திகதி தொடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
