கிழக்கு ஒன்ராறியோ மற்றும் மேற்கு கியூபெக் மாகாணங்களின் சில பகுதிகளுக்கு புதன்கிழமை விடுக்கப்பட்டிருந்த கடுமையான இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கையை கனடாவின் சுற்றுச்சூழல் திணைக்களம் நீக்கியுள்ளது.
பலத்த காற்று, பெரிய ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை ஆகியவை குறித்த உடனடி அச்சுறுத்தல் குறைந்ததையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, புதன்கிழமை காலையில், கடுமையான காற்று, கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவற்றை எதிர்பார்க்கலாம் என கனடாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
அச்சுறுத்தும் வானிலையின் போது உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு, பொதுமக்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
தற்போது எச்சரிக்கை நீக்கப்பட்ட போதிலும், பொது மக்கள் உள்ளூர் வானிலை அறிக்கைகளை தொடர்ந்து அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என, சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.