ஹரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராகவும் பிரதம நீதியரசராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.அவர் ஏற்கனவே வகித்து வந்த பூர்வீக உறவுகள் மற்றும் வடக்கு விவகாரங்கள் கனடா.விற்கான அமைச்சராகவும் தனது பணியை தொடருவார்…
பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான புதிய அமைச்சரவையில் புதிய அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஈழத்தமிழ் பூர்விகத்தை கொண்ட ஹரி ஆனந்தசங்கரி கனேடிய மக்களின் அதிக செல்வாக்கினை பெற்ற ஒருவர்.
இவருக்கு வழங்கப்பட்ட அமைச்சு ஒரு நாட்டின் மிக உயரிய அமைச்சு பொறுப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அனைத்து தமிழ் மக்களாலும் பார்க்கப்படுகிறது , இதன் மூலம் அவர் இந்தப் பதவியை வகிக்கும் முதல் தமிழ்-கனேடியர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.
இவர் ஒரு வழக்கறிஞரும் தமிழர்களின் உரிமைகளுக்காக நீண்டகாலமாக குரல் கொடுக்கின்ற ஒருவராகவும் திகழ்கின்றார் இலங்கையில் போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கும் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கும் அழுத்தம் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இலங்கை அரசாங்கத்தின் தமிழின படுகொலையை அங்கீகரிக்கும் முகமாக மே 18ம் திகதியை தமிழின படுகொலை நாளாக கனேடிய அரசாங்கம் பிரகடனம் செய்தமை,யுத்த குற்றங்கள் புரிந்த இலங்கையின் ஜனாதிபதிகள் மற்றும் இராணுவ பிரதிநிதிகளுக்கு எதிராக தடையை அமுல்படுத்தியமை போன்றன இவரின் முக்கியமான செய்வர்களாக தமிழர்களால் பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் மிக முக்கியமான அமைச்சு ஹரி அனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டுள்ளமை மிக முக்கியான வரலாற்று நிகழ்வாக பார்க்கபடுகிறது.