இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) பிற்பகல் இந்தியாவிற்கு பயணமானார்.
இந்தியாவில் செயறகை நுண்ணறிவு தொடர்பான மாநாடு தொடர்ந்து 05 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கெடுப்பதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-195 என்ற விமானத்தில் ஜனாதிபதி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
