சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி வேலணையில் இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தினரால் குறித்த போராட்டம் வேலணை வங்ககாவடியில் நடைபெற்றது.
வங்களாவடி சந்தியில் ஆரம்பமான குறித்த போராட்டம் நடைபவனியாக வேலணை பிரதேச செயலகம் வரை சென்று பிரதேச செயலர் தனபாலசிங்கம் அகிலனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்திருந்தனர்.