நாட்டில் நேற்றைய தினம் கடும் மழை பெய்த நிலையில், அரநாயக்கவின் அம்பலகந்த, தோதல்தோய மற்றும் கந்துன ஆகிய பகுதிகளில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த மழையினால் அம்பலகந்த பகுதியின் காபட் வீதியில் பாரிய வெடிப்பொன்று ஏற்பட்டு வீதி தாழிறங்கியுள்ளதுடன், கடந்த காலங்களில் சேதமடைந்த மதகு கால்வாய் முறையாக புனரமைக்கப்படாததால் இந்த சேதம் நேர்ந்துள்ளது.
