இஹலகும்புக்வெவவில் நேற்று (10) இரவு 8.00 மணியளவில் விவசாயி ஒருவரை காட்டு யானை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த யானை சோளத் தோட்டத்துக்குள் புகுந்த வேளையில் விவசாயி விரட்ட முயன்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்திலேயே யானையின் தாக்குதலுக்கு உட்பட்டு உயிரிழந்துள்ளார்.
விவசாயி கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் சூரியவெவ பிராந்திய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியாலையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த பகுதியில் மாலை 6.00 மணிக்கு மேல் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் இருப்பதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
